ராம்சரண் மற்றும் ஜான்வி கப்பூர் இணைந்து நடிக்கும் புதிய படம் - "ராம்சரண் 16"

 ராம்சரண் மற்றும் ஜான்வி கப்பூர் நடிக்கும் புதிய படம் "ராம்சரண் 16" குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது.


புதிய பட துவக்க விழா வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இவ்விழாவில் நடிகர் சிரஞ்சீவி, ராம் சரணின் மனைவி, உபாசனா காமினேனி, இயக்குநர் ஷங்கர் மற்றும் ஏ.ஆர். ரகுமான் பங்கேற்றனர். புச்சி பாபு சனா இந்த படத்தை இயக்க இருக்கிறார். முன்னணி தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். ஜான்வி கபூர் 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

ஜான்வி கபூரின் அடுத்த படமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இதனால் ராம்சரணின் 16 வது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Comments

Popular posts from this blog

Kanguva Teaser: வெளியானது கங்குவா டீசர்.. பில்டப் பண்ண அளவுக்கு வொர்த்தா? இல்லையா?

Longing for the Old Samantha: Fans Yearn for Her Previous Charm

விளம்பரத்திற்காக நீச்சல் உடையில் சமந்தா.. சம்பளம் எவ்வளவு தெரியுமா